GCE O/L எழுதிய மாணவிகளுக்கான பதினோராவது பரிசளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் வைபவம்

OL எழுதிய மாணவிகளுக்காக வருடாந்தம் நடத்தப்பட்டு வருகின்ற ஷரியா கற்கைநெறி இவ்வருடமும் பதினோராவது முறையாக தாருல் ஹுதா அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகளுக்கான பெண்கள் கல்லூரியில் சிறப்பாக நடாத்தி முடிக்கப்பட்டது.

கற்கை நெறியை பூர்த்தி செய்து அதன் பின்னர் நடத்தப்பட்ட பரீட்சையிலும் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட மாணவிகளுக்கான பரிசளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் வைபவம் குல்லியாவின் கேட்போர் கூடத்தில் குல்லியாவின் தலைவர். டாக்டர்.ஏ.எச்.எம்.ஹாரிஸ் அவர்களின் தலைமையில் நேற்று (20 /3 /2019) சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகரசபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ. எம். றகீப் அவர்கள் கலந்து சிறப்பித்தார். கௌரவ அதிதிகளாக மாநகர சபை உறுப்பினர்களான சகோதரர் ஏ.ஆர்.அமீர், சகோதரர் எம்.எஸ்.எம்.ஹாரிஸ். சகோதரர்.அஷ் ஷெய்க் ஏ.ஜீ.எம்.நதீர் நளீமி. சகோதரர் எம்.எஸ்.எம்.உமர் அலி ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *